திருகோணமலையில் மறு அறிவித்தல் வரை அனைத்து மதுபான சாலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண மதுவரித்திணைக்கள மாகாண பணிப்பாளர் ஏ.தர்மசீலனின் பணிப்புரைக்கு அமைய திருகோணமலை மதுவரித் திணைக்கள அதிகாரி எஸ். கே. வணிகசிங்க அவர்களின் வழிகாட்டலுடன் திருகோணமலை பிராந்தியமதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி ஜானி அத்தநாயக்க குழுவினர்களினால் திருகோணமலையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.
மதுபான சாலைகளில், திருட்டுத்தனமாக மதுபான விற்றபனை நடைபெறுவதாக திருகோணமலை மதுவரித் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைவாக அனைத்து மதுபான சாலைகளுக்கும் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்று (30) பிற்பகல் முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து மதுபான சாலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டதாகவும் திருகோணமலை மதுவரித் திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.





