மொட்டுக் கட்சிக்கு தூது விட்ட தம்மிக்க…! ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலும் அதிரடி கருத்து…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என வர்த்தகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பு 7, ரொஸ்மீட் பிளேஸில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொழிற்சங்க அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய பெரேரா, ஜனாதிபதித் தேர்தலில்  போட்டியிடுவதற்கு தாம் தயார் என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானிக்க வேண்டும் என்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் முன்னிலையில், இந்த வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் கட்சி முடிவெடுக்க வேண்டும் என தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.

“கட்சியின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். தேர்தலில் வெற்றி பெற தேவையான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறேன். மேலும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டத்திலும் பணியாற்றி வருகிறேன்,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *