மறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு இன்றும்(06)பொதுமக்கள் மக்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
அன்னாரின் பூதவுடல் திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றையதினம் முதல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளை (07) இறுதி கிரியைகள் இடம்பெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அதேவேளை, இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாவட்ட கிளை தலைவர் சண்முகம் குகதாசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறிதரன், இம்ரான் மஹ்ரூப் உட்பட ஏனைய அரசியல் பிரமுகர்கள், கட்சி போராளிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.