கொரோனா வைரஸ் தொற்று உறுதியான பெண் ஒருவரை வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற ‘சுவசெரிய’ நோயாளர் காவு வண்டியொன்று கேகாலை – அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான குறித்த பெண்ணை தெரணியகலையில் இருந்து அவிசாவளை மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்து சென்றபோதே, இன்று திங்கட்கிழமை அதிகாலை இந்த விபத்து நேர்ந்துள்ளது.
மேலும் எதிர்திசையில் பயணித்த பாரவூர்தி ஒன்று இடமளிக்காமை காரணமாக குறித்த நோயாளர் காவு வண்டிக் பள்ளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லையென காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.





