நாடளாவிய ரீதியில் 200க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் நாளை திங்கட்கிழமை (8) மற்றும் செவ்வாய்க்கிழமை (9) ஆகிய இரு தினங்களில் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.
அதன்படி கிராம உத்தியோகத்தர்கள், நில அளவையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உட்பட அரச துறையில் உள்ள 200 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள அறிவித்துள்ளது.
ஆனால் அகில இலங்கை தாதியர் சங்கம் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளது.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தினால் நோய்வாய்ப்பட்ட மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக சங்கத்தின் செயலாளர் எஸ். பி.மெதிவத்த தெரிவித்தார்.