5 ஆயிரத்து 278 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலத்தை திறந்து வைத்தார் – ஜனாதிபதி

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 5 ஆயிரத்து 278 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட

கொம்பனி வீதிக்கும், நீதிபதி அக்பர் மாவத்தையிலுள்ள புகையிரத பாதைக்கு இடையில்  மேம்பாலத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று திறந்து வைத்தார்.

 

நாளாந்தம் 109 புகையிரத சேவைகள் இந்த பாதையின் ஊடக மேற்கொள்ளப்படுகின்றது. இந்த சேவைகளின் போது 109 முறை புகையிரத கடவைகள் மூடப்பகின்றது. இதனால் மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

எனவே இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் நோக்கில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த புதிய திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்படி இந்த மேம்பாலத் திட்டம் நிறைவடைந்ததன் மூலம் கொம்பஞ்சாவீதியிலிருந்து கல்லுமுதூரை நோக்கியும் ஜனாதிபதி செயலகம் நோக்கியும் போக்குவரத்து நெரிசலின்றி பயணிக்க முடியும் என்பதுடன்

வாகன நெரிசல் காரணமாக வீதியில் வீணாகும் மக்களின் நேரத்தையும் தேசிய பொருளாதாரத்தில் சேர்க்க முடியும் என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன,
ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *