
பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் தான் நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் யாருக்கு வேண்டுமானாலும் உயர்நீதிமன்றத்திற்கு செல்லலாம். அதனைவிடுத்து தேர்தல்கள் ஆணைக்குழுவை விமர்சிப்பதில் அர்த்தமில்லை. சட்டத்தின் பிரகாரமே மீண்டும் பாராளுமன்றம் வந்தேன் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.