இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட துபாயில் பதுங்கியிருந்த இரு குற்றவாளிகள்..!

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைச் செய்விட்டு துபாயில் பதுங்கியிருந்த இரண்டு இலங்கையர்கள் அந்நாட்டில் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி இவர்கள் இன்று அதிகாலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினால்கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

கொழும்பு, நுகேகொட பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான களுதுர தினேஷ் சமந்த டி சில்வா என அழைக்கப்படும் “பாபி” மற்றும், 

மட்டக்குளி, சமித்புர பிரதேசத்தை சேர்ந்த  26 வயதான கங்கனம்ல திமுத்து சதுரங்க பெரேரா ஆகிய குற்றவாளிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கங்கணம்லவின் திமுத்து சதுரங்க பெரேரா கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடமும், களுதுர தினேஷ் சமந்த டி சில்வா கொழும்பு நாரஹேன்பிட்டி படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடமும் ஒப்படைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *