எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் புதிய ஜனாதிபதியொருவர் நியமிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்படும் காலம் தொடர்பாக பாராளுமன்றத்தை ஒத்திப்போடுதல் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தல் உட்பட சகல தேர்தல்களும் நிர்ணயிக்கப்பட்ட தினத்தில் நடாத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்குத் அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.