தமக்கு சொந்தமான கிராம உத்தியோகத்தர் பிரிவு அல்லது தமது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஆகியவற்றில் மாத்திரம் தமக்கான கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு கொரோனா தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள தகவலின் படி,
எனினும் அந்தந்த பிரதேசங்களுக்கு ஏற்ற, தரமான தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. எனவே தமக்கு சொந்தமான பகுதிகளில் மாத்திரம் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளுங்கள்.
அத்தோடு வேறு பகுதிகளில் இருந்து சென்று தடுப்பூசி பெற்றுக்கொண்டமையினாலேயே, கடந்த சில தினங்களாக தடுப்பூசி செலுத்தும் நிலையங்களில் சில அமைதியின்மை சம்பவங்கள் பதிவாகியிருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.