
நாட்டில் அதிகளவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து வருவதற்கு டெல்டா திரிபு காரணம் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரஞ்சித் படுவன்துடாவ தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (30) பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் தற்போது, நாளாந்தம் 4 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டில் மற்றொரு திரிபான சுப்பர் டெல்டா பரவுகின்றதா எனக் கண்டறிந்து விரைவில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்குழு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.