வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் பீ.சி.ஆர் பரிசோதனைகள் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட சுகாதார பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்.மயூரன் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ரி.எஸ்.சஞ்ஜீவ் தெரிவித்தார்.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ள பதினான்கு (14) பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மற்றும் இரண்டு பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் இடம்பெற்றது.
குறித்த பீ.சி.ஆர் பரிசோதனையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் வெள்ளிக்கிழமை (2021.08.27ஆம்) திகதி வரை 13384 நபர்களுக்கு முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டதுடன், 6336 நபர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி ஏற்றப்பட்டதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ரி.எஸ்.சஞ்ஜீவ் தெரிவித்தார்.

