வட்டக்கச்சி கட்சன் வீதியில் 4 நாட்களிற்குள் 15 பேருக்கு தொற்று!

வட்டக்கச்சி கட்சன் வீதியில் 4 நாட்களிற்குள் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இன்று மட்டும் 10 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு குறிப்பிட்டுள்ளது.

கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி கட்சன் வீதியில் இன்றைய தினம் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார பிாிவு தொிவித்துள்ளது.

குறித்த பகுதியில் கடந்த 4 நாட்களில் 4 மற்றும் 6 வயதான சிறுவர் உட்பட 15 போ் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனா்.

Advertisement

மேற்படி 15 போில் 10 போ் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 3 போ் நேற்றய தினமும், அதற்கு முன்று தினங்கள் தலா ஒவ்வொருவரும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனா்.

இந்நிலையில் தொற்றுக்குள்ளானவா்கள் சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனா்.

தற்போது குறித்த பகுதி சுகாதார பிாிவு மற்றும் பாதுகாப்பு பிாிவின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *