ஐ.நாவினால் பிரகடனப்படுத்தப்பட்ட (ஓகஸ்ற் 30) வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டி, உலகளவியரீதியில் பல்வேறு கவனயீர்ப்பு நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழர்களால் Trafalgar Square சதுக்கத்தில் நேற்று மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை முன்னெடுக்கப்பட்டது .
இதேவேளை இலங்கையில் தமிழர் வாழும் பிரதேசத்திலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வீடுகளில் இருந்தபடியே கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
இதேவேளை ஜேர்மன்,பிரான்ஸ் கனடா போன்ற நாடுகளிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.