சமகால அரசியலும், தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வு ஒன்று வவுனியாவில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வானது ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் வவுனியா, வாடி வீட்டில் இன்று இடம்பெற்றிருந்தது.
இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன், மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோரால் சமகால அரசியல் தொடர்பாகவும், தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் அதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் உரையாற்றியிருந்தனர்.
ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடமாகாண சபை அமைச்சர் சிவநேசன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், செட்டிகுளம் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜெகதீஸ்வரன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.