
ஸ்ரீ ஜெயவர்த்தனபுரா பல்கலைக்கழகத்தின் மரபணு பகுப்பாய்வு துறை நடத்திய ஆராய்ச்சியின் முடிவுகளின்படி, மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு அதிகமாக இருப்பதாக சிறப்பு மருத்துவர்கள் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் டாக்டர். அசோக குணரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டில் சுமார் 70% மக்களுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றும் அந்த தடுப்பூசிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வரை நாட்டில் உள்ள அனைத்து மக்களும் நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறிப்பிட்டார்.




