நாட்டில் மேலும் 974 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று 3 ஆயிரத்து 588 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அதற்கமைய, இன்று திங்கட்கிழமை இதுவரையில் 4ஆயிரத்து 562 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து36 ஆயிரத்து 81 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 14 ஆயிரத்து 394 பேர் குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 71 ஆயிரத்து 992 ஆக அதிகரித்துள்ளது.





