வடக்கில் நிலக் கண்ணிவெடி அகற்றப்பட்ட பகுதிகளுக்கு ஜப்பானிய தூதரக அதிகாரிகள் விஜயம்

 

கிளிநொச்சி  – முகமாலை மற்றும் யாழ்ப்பாணம் – கேரதீவு ஆகிய பகுதிகளில் ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் நிலக்கண்ணிவெடி அகற்றப்பட்ட பகுதிகளுக்கு ஜப்பானிய தூதரக அதிகாரிகள் சென்று பார்வையிட்டுள்ளனர். 

இந்த விசேட விஜயமானது, இன்று பகல் இடம்பெற்றுள்ளது. 

இதன்போது, கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட முகமாலை மேம்பெடுகேண பகுதியில் ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் வெடிபொருள் அகற்றும் பணியினை மேற்கொண்டு வரும் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் நிறுவனமான டாஸ் நிறுவனத்தினால் வெடிபொருட்கள் அகற்றப்பட்டன.

இதற்கமைய, குறித்த பணி நிறைவுறுத்தப்பட்ட பகுதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு அந்த காணி உரிமையாளர்களுடன் ஜப்பானிய அதிகாரிகள் கலந்துரையாடியுள்ளனர். 

அதேவேளை, தொடர்ந்து கேரதீவு பகுதிக்கு சென்று, அப்பகுதி கடற்கரையோரங்களில் கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் கடற்கரையோரங்களில் அடையாளம் காணப்பட்ட வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்டுள்ளனர். 

அத்துடன், தற்போது அப்பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபடுகின்ற கடற்றொழிலாளர்கள் மற்றும் அந்த பிரதேச மக்களுடனும் கலந்துரையாடியுள்ளனர். 

மேலும், ஜப்பான் நாட்டின் உயர் அதிகாரிகாரியான அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கு உதவி வழங்குதல் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் ஆலோசகர் கடோ அகிகோ மற்றும் ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரி ஆகியோரே குறித்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *