டுபாயில் இருந்து இலங்கைக்கு வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவினரால் சந்தேகநபர் இன்று (01) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 20,000 சட்டவிரோத சிகரெட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் கட்டுநாயக்க விமான நிலைய பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.