ராஜபக்சவின் ஆசியுடன் செல்லும் எவருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கடுவெல முல்லை புருமா விகாரையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ரணவக்க இவ்வாறு தெரிவித்தார்.
அதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஐக்கிய குடியரசு முன்னணியின் தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.