போலி உறுதி மோசடி – நில அளவையாளர் உட்பட மூவர் கைது!

மோசடிச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் வேளையில் தற்போது போலி உறுதி மோசடியில் ஈடுபட்டமைக்காக, யாழ்.மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் நில அளவையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

வெளிநாட்டில் வசிக்கும் தம்பதியினர் மருதங்கேணியில் உள்ள தமது காணிக்கு ஆனைக்கோட்டையில் வசிக்கும் ஒருவருக்கு அற்றோனித்தத்துவம் வழங்கியிருந்தனர். அந்த  நபர் அற்றோனித்தத்துவ அதிகாரத்தைப் பயன்படுத்தி காணிக்கு அருகிலிருந்த காணிகளையும் ஆக்கிரமித்து பருத்தித்துறையைச் சேர்ந்த நில அளவையாளர் மூலம் வரைபடம் வரைந்து   பிரசித்த நொத்தாரிஸ் மூலம் பிறிதொருவருக்கு அந்தக் காணியின் அதிகாரத்தை  கைமாற்றியுள்ளார் .

இது தொடர்பில் போலியாக உறுதி ஆவணப்படுத்தப்பட்ட  காணியின் உரிமையாளர்கள் யாழ் மாவட்ட விசேடகுற்ற விசாரணைப்பிரிவினரிடம் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை நடத்திய பொலிஸார், அற்றோனித்துவத்தைத் தவறாகப் பயன்படுத்தியவர், காணியை அளவீடு செய்த நிலஅளவையாளர் மற்றும் காணியின் அதிகாரம் இறுதியாக மாற்றப்பட்டவர் ஆகிய மூவரையும் கைதுசெய்தனர்.அவர்கள் நீதி மன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்ட போது, மூவரையும் கடுமையாக எச்சரித்த நீதவான் அவர்களைப் பிணையில் செல்ல அனுமதி வழங்கியதுடன்    வழக்குத் தவணையிடப்பட்டது  என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *