எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கட்சியின் கொள்கை மற்றும் தீர்மானத்துக்கு எதிராக செயற்படுபவர்களை கட்சியின் பதவி நிலைகளில் இருந்து நீக்குவதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.