ஈழத்து சினிமா படைப்பாக உருவாகியிருக்கும் ‘அன்புள்ள’, ‘பறவாதி’ ஆகிய இரண்டு முழு நீள திரைப்படங்கள் விரைவில் வெளிவரவுள்ள நிலையில், கருடன் தயாரிப்பு நிறுவனம் வழங்கும் ‘அன்புள்ள’ திரைப்படத்தின் அறிமுக விழாவும் பழங்குடி மக்களின் வாழ்வியல் சார்ந்த ‘பறவாதி’ திரைப்படங்களின் முன்னோட்ட காட்சிகளின் வெளியீட்டு விழாவும் நாளைய தினம்(01) மாலை 5 மணிக்கு யாழ்ப்பாணம் கார்கில்ஸ் சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
‘அன்புள்ள’ திரைப்படம் கதிரின் எழுத்து, இயக்கத்திலும் ‘பறவாதி’ அஜந்தனின் எழுத்து, இயக்கத்திலும் அமைந்துள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம்(31) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே முன்னோட்ட காட்சி வெளியீடு தொடர்பிலான அறிவிப்பினை படக்குழுவினர் அறிவித்தனர்
” எதிர்காலத்தில் வர்த்தக சினிமாவாக முன்கொண்டு செல்வதும் படைப்பார்கள் தங்களது பணிகளை முன்னெடுக்கும் போது எவ்வித தடைகளுமின்றி புதிய பாதையில் சர்வதேச படைப்பாளர்களுடன் ஈழத்து படைப்புகளை இணைப்பது நோக்கமென” கருடன் தயாரிப்பு நிறுவனத்தின் பணிப்பாளர் எல்றோய் அமலதாஸ் தெரிவித்தார்.