பொலன்னறுவையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமையஇ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பொலன்னறுவை – சேவாகம பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவரே காயமடைந்துள்ளார்.
குரங்குகளைத் துரத்துவதற்காக அனுமதி பெற்ற துப்பாக்கியைத் தம்வசம் வைத்திருந்த அவர், அதனைக் கொண்டு செல்லும் போது, தவறுதலாக இயங்கியுள்ளதாகக் காயமடைந்தவரின் மனைவி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த நபர் உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டாரா என்ற சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.