சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 9 மாத பெண்குழந்தை ஒன்று உயிரிழந்த நிலையில் பிரேத பரிசோதனையில் குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குழந்தை சுகயீனமுற்ற வேளை சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு நேற்று வியாழக்கிழமை அங்கு மரணமடைந்துள்ளது.
மேலும் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த குழந்தைக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்ட முதல் குழந்தை இதுவாகும் என குறிப்பிடப்படுகின்றது.
இதேவேனை கொவிட் தொற்று காரணமாக இலங்கையில் குழந்தை பிறப்பு விகிதம் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக 3,500 பேர் உயிரிழந்துள்ள போதிலும் 350,000 குழந்தைகள் பிறக்கும் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில்: