கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் சற்றுமுன் வெளியான தகவல்!

நாட்டில் மேலும் 367 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் முன்னதாக இன்று 918 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அத்துடன், வெளிநாடுகளில் இருந்து வருகைதந்து தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகிவந்த 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று இதுவரையில் ஆயிரத்து517 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 282, 060 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் 918 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேறினர்.

அதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 254,871 ஆக அதிகரித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

The post கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் சற்றுமுன் வெளியான தகவல்! appeared first on Tamil News.

Leave a Reply