முல்லைத்தீவு – கேப்பாபிலவு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் ஒன்றில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
கேப்பாபிலவு பகுதியில் உள்ள ஆறாவது காலாட்படையில் கடமையாற்றும்,
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய லான்ஸ் கோப்ரல் நிலையுடைய சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது உயிரிழப்பு தொடர்பில் இராணுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன்,
சடலம் முல்லைத்தீவு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.