திருக்கோணேஸ்வரம் ஆலய விவகாரம் தொடர்பில் கிழக்கு ஆளுநர் ஏற்பாடு செய்த கூட்டத்தில் அமைதியின்மை..!

வரலாற்று சிறப்பு மிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயம் சம்பந்தமாக கிழக்கு ஆளுநர் ஏற்பாடு செய்த உத்தியோக பூர்வமற்ற கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிழக்கு மாகாண ஆளுநர்  செந்தில் தொண்டமானால் நேற்றையதினம் யாப்புக்கு முரணான திருக்கோணேஸ்வரம் ஆலய அபிவிருத்தி சம்பந்தமான பொதுச் சபை உறுப்பினர்களுக்கான கூட்டம் ஒன்று அவசர அவசரமாக நடத்தப்பட்டது.

அங்கு கருத்து தெரிவித்த ஆளுநர் செந்தில் தொண்டமான்,

திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் ராஜ கோபுரம் கட்டுவதற்கான ஏற்பாடு தன்னால் செய்யப்படுள்ளதாக தெரிவித்தார் , 

அதனை தொடர்ந்து சோழர் காலத்து பல நூறு கோடி ரூபாய் பெறுமதியான தாலி ஒன்று களவு போயுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து கூட்டத்தை முடித்து போது மக்களுக்கு கேள்வி கேக்க செந்தில் தொண்டமான் வாய்ப்பு வழங்காமல் செல்ல முயன்றார். 

கூட்டத்துக்கு வருகை தந்த திருகோணமலை சேர்ந்த ஆயுள் கால உறுப்பினர்கள் தமது கேள்விக்கு நீங்கள் பதில் கூறியே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டில்,

கடந்த 2009 ம் ஆண்டு நீதிமன்றதால் நிர்வாக சபையிடம் கோவிலை ஒப்படைக்கும் போது இப்படியான சோழர் காலத்து நகை என்ற ஒன்று இருக்கவில்லை , கடந்த சிவராத்திரி நிகழ்வில் ஆலயத்துக்கு சொந்தமான அனைத்து அசையும் அசையா சொத்து விபரங்களும் பெரிய திரையில் மக்கள் பார்வைக்கு காண்பிக்கபட்டது , அதில் எங்குமே சோழர் காலத்து நகை என்ற ஒன்று எங்குமே இருக்கவில்லை , அவ்வாறு இருக்க இப்படி சோழர் காலத்து நகை திருட்டு என்று செய்தி வெளியிட பின்னணி என்ன ? 

⁠திருகோணமலையில் தீர்க்கப்பட வேண்டிய கன்னியா , கோணேசர் ஆலய சட்ட விரோத கடைகள் என்று எவ்வளவோ பிரச்சனை இருக்கும் போது அதை பார்க்காமல் இந்த மூன்று பவுண் தாலி விடயத்தை தூக்கி பிடித்த யாப்புக்கு முரணான கூட்டத்தின் நோக்கம் என்ன ? 

குடியியல் நீதிமன்றில் ஆலயம் தொடர்பான ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் போது எழுத்து மூலம் எந்த அறிவித்தலும் இல்லாமல் இப்படி ஒரு சட்டத்துக்கு முரணான அவசர கூட்டம் கூட்ட வேண்டிய தேவை என்ன ? என கேள்விகளை எழுப்பினர்.

இவ்வாறானதொரு நிலையில் மக்கள் கேள்விகளுக்கு பதில் கூற முடியாத செந்தில் தொண்டமான் அவ்விடத்திலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *