கண்டி பகுதியிலுள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் பதினைந்து வயதுடைய மாணவன் நேற்று (12) பாடசாலைக்கு சென்று வீடு திரும்பவில்லையென மாணவனின் தாயார் கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கட்டுகஸ்தோட்டை ரணவன வீதியை சேர்ந்த மொஹமட் முகரத் முஜாஹித் என்ற மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவன் நேற்று காலை 6.00 மணியளவில் பாடசாலைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியதாகவும்,
அதன் பின்னர் அவரைப் பற்றிய எந்த தகவலும் இல்லை எனவும் தாய் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.