சுகாதார அமைச்சின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் விசேட வைத்தியர் ஜயருவன் பண்டார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
மேலும் சமூக ஊடக நேர்காணல் ஒன்றின்போது அவர் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கொரோனா முதலாம் மற்றும் 2 ஆவது அலையின் போது சுகாதார அமைச்சில் முக்கிய பொறுப்பு வகித்த விசேட வைத்தியர் ஜயருவன் பண்டார, பின்னர் குறித்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





