தடுப்பூசி முழுமையாக செலுத்தினாலும் டெல்டா தொற்று பரவும் அபாயம்!!

தடுப்பூசி நடவடிக்கைகள் முழுமையாக முன்னெடுக்கப்பட்ட போதிலும் டெல்டா தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தற்போது இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களும் தொற்றுக்குள்ளாகும் நிலைமை காணப்படுவதாகவும் அப்பணியாகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஜ்சித் சுட்டிக்காட்டினார்.

ஆகவே மக்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நாட்டில் படிப்படியாக சுகாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் தொற்றின் நிலைமையை கருத்திற்கு கொண்டு மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை தளர்த்துவது அல்லது நீடிப்பது குறித்து அறிவிக்கப்படும் என்றார்.

மேலும் டெல்டா மாறுபாடு அதிகரிக்கும் பட்சத்தில் மேலதிக கட்டுப்பாடுகள் அமுல்படுத்துவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply