தமிழர் வாழும் பிரதேசங்களுக்கு புத்தர்சிலைகள் வழங்க நடவடிக்கை..!

ஜனாதிபதியின் பதவியேற்பு தினத்தையொட்டி வடக்கு மாகாணத்திலுள்ள விகாரைகளுக்கு புத்தர் சிலைகள் வழங்க நவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி விடயம் தொடர்பாக தொலைபேசிமூலம் யாழ்ப்பாணம், பருத்திதுறை, காரைநகர், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்ட அனைத்து சாலை முகாமையாளர்களுக்கும் , வட மாகாண பொதுஜனபெரமுன தொழிற்சங்க இணைப்பாளர்களையும் தற்சமயம் உள்ள கொரோனா நிலமை காரணமாக நேரடியாக அழைத்து இதுபற்றி கலந்துரையாட முடியாதனால் தொலைபேசிமூலம் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு இ.போ.ச பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்

எனவே எதிர்வரும் 18.11.2021 அன்று ஜனாதிபதி அவர்களின் பதவியேற்பு தினத்தையொட்டி ஒரு சாலைக்கு ரூபா 50,000 பெறுமதியான புத்தர் சிலைகளை அருகில் உள்ள விகாரைகளுக்கு வழங்குவதற்கும் அதற்கான செலவுகளை அந்தந்த சாலை ஊழியர்சங்க உறுப்பினர்களே பொறுப்பேற்க வேண்டுமெனவும் இலங்கை போக்குவரத்து சபை தலைவரினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விடயம் தொடர்பாக மேலதிக தகவல்கள் தேவைப்பட்டால் தன்னுடனோ அல்லது வடமாகாண பொதுஜனபெரமுன போக்குவரத்து ஊழியர்சங்க இணைப்பாளர் இளஞ்செல்வன் அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம் என வடக்கு இலங்கை போக்குவரத்து சபை பிரதான பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *