ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழு பிரதிநிதிகள் இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனை திருகோணமலையில் உள்ள தமிழரசுக் கட்சி மாவட்டப் பணிமனையில் இன்று(05) மாலை சந்தித்தனர்.
குறித்த சந்திப்பின் போது, நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் நிலவரங்கள் பற்றியும், திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள் பற்றியும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.