தேசிய மக்கள் சக்தியின் மேடைப் பேச்சுக்கள் நடைமுறையில் சாத்தியமில்லை – இம்ரான் எம்.பி தெரிவிப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வும், ஐக்கிய மக்கள் சக்தியின் தோப்பூர் காரியாலய திறப்பு விழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை தோப்பூரில் இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தலைமையில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் – 

இம்முறை ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ளது. மக்கள் யாரை தெரிவு செய்ய வேண்டும் என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். சஜித் பிரேமதாசாவுக்கான ஆதரவு தற்போது அதிகரித்து வருகிறது.இதனை இல்லாமல் செய்வதற்காக தற்போது பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. 


பல பாராளுமன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவோடு இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.விரைவில் அந்த செயற்பாடுகள் நடைபெறுகின்ற போது நாட்டின் ஜனாதிபதியாக சஜித் பிரேமதாச வருவார் என தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியானது தற்போது மிகவும் மோசகரமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.அவர்களின் சுயரூபம் தற்போது மக்களுக்கு தெளிவாக புலப்படுகிறது.அந்தக் கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் பேசிய பேச்சானது தற்போது பரவலாக பேசப்படுகிறது.2010 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவான மஹிந்த ராஜபக்ஷ எவ்வாறு செயல்பட்டாரோ அவ்வாறே அனுரகுமார திசாநாயக்காவின் பேச்சும் காணப்படுவதாக தெரிவித்தார்.NPP என்று இன்று சொல்கின்றவர்கள் அவர்களின் JVP என்ற குண அம்சங்கள் காணப்படுகின்றன. 

இம்முறை தேர்தலில் மக்கள் பிழையான முடிவினை எடுத்தால் நாடு மிக மோசமான நிலைக்குச் செல்லும். குறிப்பாக அரக்கலயை விட மிக மோசமான நிலைக்குச் செல்லும்.அதனையே தேசிய மக்கள் சக்தி முன்னெடுக்கின்றது.தேசிய மக்கள் சக்தியின் பேச்சானது.பேச்சாகத்தான் பார்க்க முடியுமே ஒழிய அது எந்த அளவு சாத்தியமாகும் என்பது தெரியாது.

எல்லா மக்களினுடைய பிரச்சினைகளையும் அறிந்தவராக சஜித் பிரேமதாச காணப்படுகிறார்.எதிர்க்கட்சியில் இருந்தாலும் பல்வேறுபட்ட அபிவிருத்திகளை,செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.இவரைப் போன்றவர்கள் ஜனாதிபதியாக வருகின்ற போதுதான் நாடு தற்போது இருக்கின்ற நிலையிலிருந்து மாறுபடும் எனவும் தெரிவித்தார்.     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *