2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுதராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாதத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்த பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வழங்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பரீட்சை முடிவுகளை செப்டெம்பர் மாதத்தில் வழங்குவோம் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.