சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் கண்காட்சி ஒன்று இன்றையதினம்(13) கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது.
வலிமையான பெண்களுக்கு வலுவூட்டும் கரங்கள் எனும் தொனிப்பொருளில் குறித்த கண்காட்சி இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது, பெண்களால் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், விற்பனையும் இடம்பெற்றது.
நிகழ்வில், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், உற்பத்தியாளர்கள், நிறுவன பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.