ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்றையதினம்(13) இரவு மூதூரில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எ.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் உரையாற்றுகையில்,
எல்லா இடங்களிலும் சஜித் பிரேமதாசவுக்கு மக்களின் பேராதரவு காணப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தில் , நானும் சஜித்துக்கு ஆதரவு வழங்குகின்ற நண்பர்களான சுமந்திரன்,சம்பிக்க ரணவக்க ஆகியோர் இணைந்து சட்டம் ஒழுங்கு அமைச்சர்,குடிவரவு குடியகழ்வு திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராக மிகப்பெரிய ஊழல் மோசடி தொடர்பாக , மிகப் பெரிய மனித உரிமை தொடர்பான வழக்கொன்றை செய்திருக்கின்றோம்.
சஜித் பிரேமதாசவை பலரும் பலவிதமாக விமர்சனம் செய்யலாம்.
முஸ்லீம் சமுதாயம் மீது அவரது நடத்தை சிறப்பாகவுள்ளது.முஸ்லீம் மக்கள் பலஸ்தீன மக்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கவலையுற்றிருந்த போது ரணில் விக்கிர சிங்க அவர்களோடு நற்புப் பாராட்டினார்.
எமது நாடு பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்ட போது எமது அயல் நாடான இந்தியா கைகொடுத்து உதவியது.
கடந்த காலத்தில் ஆட்சியை கைப்பற்றுவதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலை காரணம் காட்டி பல்வேறு அராஜகங்களை புரிந்தார்கள்.
பல்வேறு துவேசங்களை கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.பெரும்பாண்மை மக்களின் பேராதரவு இருந்த அந்த நேரத்திலும் கோட்டாபயவினால் 52 வீதமான வாக்குகளே பெற முடிந்தது.
இம்முறை கோட்டாவுக்கு அடித்த அலைபோன்று இப்போது இல்லை. சஜித் பிரேமதாசவே இம்முறை வெற்றி பெறுவார் எனவும் தெரிவித்தார்.