வவுனியாவில் 152 வாக்களிப்பு நிலையங்கள்: பாதுக்காப்புக்காக 1500 பொலிசார் கடமையில்- மாவட்ட தேர்தல் ஆணையாளர்!

வவுனியாவில் ஜனாதிபதித் தேர்தலுக்காக 152 வாக்பகளிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு  கடமைகளுக்காக 1500 பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட தேர்தல் ஆணையாளருமான பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது. 

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தேர்தலுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தேர்தல் தினத்தில் நடந்து கொள்ள வேண்டிய முறைமைகள் தொடர்பாக வேட்பாளர்களின் முகவர்கள், பொலிசார், தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட ஏனைய தரப்புக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 

வவுனியாமாவட்டத்தில் 128,585 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், அவர்களுக்காக 152 வாக்களிப்பு நிலையங்களும், 12 வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கெண்ணும் மத்திய நிலையமாக வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி செயற்ப்படவுள்ளதுடன், அதற்கான உரிய ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் கடமைகளுக்காக 1500ற்கும் மேற்ப்பட்ட பொலிசார் வவுனியா மாவட்டத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் கடமைகளில் ஈடுபடுபவர் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *