மீனவர்கள் என்ற போர்வையில் ரணிலுக்கு வாக்களிக்குமாறு கோரியவர்கள் மீனவர்கள் அல்லர் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சமாசத்தின் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.
யாழில் இன்றையதினம் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இன்றையதினம் யாழ் மாவட்ட சம்மேளனத்திலிருந்து சில அரசியற் கட்சிகளின் உறுப்பினர்கள் தாங்கள்தான் மீனவர்கள் என்ற போர்வையில் ஒரு செய்தியொன்றினை வெளியிட்டுள்ளார்கள்.
ரணில் ஐயாதான் எங்களை தூக்கி பிடித்தவர் என்றும் அவர்தான் எங்களை காப்பாற்றியவர் என்றும் ரணில் ஐயாவிற்கு வாக்களிக்குமாறும் கூறியுள்ளார்கள்.
அவர்கள் மீனவர்கள் அல்லர். எங்களது மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும். அவர்கள் ஒரு கட்சி சார்ந்த ஆட்கள்.
ஒரு கட்சியின் ஆட்கள் மீனவர்கள் என்ற போர்வையில் ஒரு கட்சியால் உருவாக்கப்பட்டு இன்று எங்களுடைய போராட்டத்தை மழுங்கடிப்பு செய்வதற்காகவும் ஒரு தென்னிலங்கையில் உள்ள சிங்களவனுக்கு எதையோ காட்டுபவர்களாகவும் வந்துள்ளனர்.
இன்று ரணில் வந்து எமது மக்களுக்கு எதனை செய்தார்.
எமது கடல்வளங்களை இன்று விற்பனை செய்துகொண்டிருக்கின்றார்கள். இதனை நிறுத்துமாறு கூற இவர்களுக்கு துணிவில்லை.
ஆனால் ரணில்தான் எங்களை தூக்கி விட்டவர் என கூறுகின்றார்கள்.
உண்மையில் அவர்கள் ஒரு கட்சி சார்ந்தவர்கள்.
அவர்களுக்கு கடற்றொழிலினை பற்றி கதைக்க அருகதையில்லை.
எனவே இது தமிழர்களின் பிரச்சினை. தமிழர்கள் நாங்கள் ஒன்றாக இருக்கவேண்டிய பிரச்சினை.
அதேவேளை ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு வாக்களிக்குமாறு கூறுவதற்கு நீங்கள் யார்? எனவும் கேள்வியெழுப்பினார்.
எனவே நாங்கள் சங்கிற்கு கீழே ஒரே வாக்கை செலுத்துவோம் எனவும் தெரிவித்தார்.