“ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாஸவும் இணைந்து செயற்பட்டால் நல்லது. அது நாட்டு மக்களுக்குப் பெரும் பாக்கியமாக இருக்கும்.” என் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
“நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும்.
நான் அங்கம் வகிக்கும் கட்சி இது தொடர்பில் எத்தகைய முடிவை எடுத்தாலும் எனது முழுமையான ஆதரவு அநுரவுக்கு இருக்கும்.
ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாஸவும் இணைந்து செயற்பட்டால் நல்லது. அது நாட்டு மக்களுக்குப் பெரும் பாக்கியமாக இருக்கும். ஜனாதிபதித் தேர்தலில் சஜித் மற்றும் ரணில் பெற்ற வாக்குகளை இணைத்தால் அநுர பெற்றதை விடவும் அதிகம். எனவே, இரு தரப்புகளும் இணைந்தால் பொதுத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம்.
ரணில் விக்கிரமசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிடமாட்டார், ஆனால், கட்சியை வழிநடத்துவார். அவர் ஜனாதிபதிப் பதவியை வகித்தவர். எனவே, அவர் இனி பிரதமர் பதவியைக்கூட ஏற்கமாட்டார்.” – என்றார்.