எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியாக காஸ் சிலிண்டர் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வா அணி தீர்மானித்துள்ளது.
சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவும், அரசியல் உயர்பீடமும் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நேற்று(04)கூடியது.
இதன்போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலின் போதும் ரணில் விக்கிரமசிங்க தரப்புக்கே நிமல் சிறிபாலடி சில்வா அணி ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.