திருகோணமலையில் கொரோனா தொற்று தீவிரமடைந்த நிலையில், இதுவரையில் 1,225 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 30 மரணங்களும் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், திருகோணமலை- இலிங்கநகர் பிரதேசமானது தற்போது அபாய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம், இலிங்கநகர் பகுதிக்குரிய பொலிஸ் கட்டுப்பட்டு குழுவினரால் இன்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
அத்துடன், இலிங்கநகர் பகுதியில் தேவையின்றி வெளியே நடமாடும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் குழுவினர் தெரிவித்தனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், தடுப்பூசி பெறாதவர்கள் உடனடியாக அருகிலுள்ள சுகாதார நிலையங்களுக்கு சென்று தடுப்புமருந்தை போட்டுக் கொள்ளுமாறு மாகாண பணிப்பாளர் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


