முன்னாள் வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய அவர் தனது வீட்டில் தனிமையில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கடந்த காலங்களில் மன்னார் நகருக்குள் ஏனைய மாவட்டத்தை சேர்ந்தவர் வருவதை தவிர்க்க நடவடிக்கை எடுத்து கொரோனா பரவலை தடுக்குமாறு கோரி பல ஆலோசனைகளையும் கோரிக்கைகளையும் தனது முகநூல் ஊடாக அரச அதிகாரிகளிடம் முன்வைத்து வந்ததுடன்.
அத்தோடு தனது முகநூல் நண்பர்களுக்கு கொரோனா விழிப்புனர்வுகளை ஏற்படுத்தி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





