சுவிட்சர்லாந்து தூதரகத்தின் முதன்மைச் செயலாளர்- கிழக்கு ஆளுநர் சந்திப்பு..!

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் (அரசியல்) திருமதி ஜஸ்டின் பொய்லட் (Justine Boillat) மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர்.ஜெயந்த லால் ரதனசேகர ஆகியோருக்கிடையில் நேற்று(24) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. 

இலங்கையின் சுவிஸ் முதன்மைச் செயலாளர் முதலில் புதிய ஆளுநருக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன், கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு சுவிஸ் அரசாங்கத்தின் முழு ஆதரவையும் வழங்க எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார். 

சுவிஸ் அரசாங்கம் மிகவும் நம்பிக்கையுடனும், தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகத்தை பாராட்டுவதாகவும், கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் கூறியது போல், ஒரு சிங்கள, தமிழ் அல்லது முஸ்லிம் பிரஜை என்று கூறாமல் அனைவரும் இலங்கைப் பிரஜையாகக் காட்டிக் கொள்ளும் ஒரு நாட்டை உருவாக்கும் நோக்கத்திற்கு மிகவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்தின் முதன்மைச் செயலாளர், எதிர்காலப் பணிகள் குறித்து ஆளுநரிடம் கேட்டறிந்த வேளை ஆளுநர், மத்திய அரசுடன் இணைந்து தேசிய திட்டத்தின் மூலம் எதிர்காலப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதால், கல்வி, சுகாதாரம், சுற்றுலாத் துறைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார். கிழக்கு மாகாணம் மற்றும் கழிவு முகாமைத்துவத்திற்கு விசேட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

சிங்களம், தமிழ், முஸ்லிம் என கலப்பு இனங்களைக் கொண்ட கிழக்கு மாகாணத்தில், மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து, கிழக்கு மாகாணத்தின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி, குறுகிய கால மற்றும் நீண்ட காலத் தீர்வுகளைக் காணவும், கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் நோக்கமான அனைவரும் இலங்கைப் பிரஜையாக கிழக்கு மாகாணத்தில் வாழும் நிலையை உருவாக்கி தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்காக செயற்பட்டு வருவதாகவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *