
புதிய கொரோனா பிறழ்வு இலங்கையில் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்கள் ஒன்று கூடும் வகையில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் காரணமாகவே அபாய நிலைமை அதிகரித்துள்ளது.
இதனால், தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாத புதிய கொரோனா பிறழ்வொன்று உருவாவதற்கான சாத்தியம் எழுந்துள்ளது. அடுத்தடுத்த மாதங்களிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான சந்தர்ப்பம் காணப்படுகிறது.
இவ்வாறான நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்கள் ஒன்று கூடுவதன் ஊடாக, கொரோனா அதிகளவில் பரவும் அபாயம் எழுந்துள்ளது என அவர் எச்சரித்துள்ளார்.