மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை- இம்ரான் மகரூப் குற்றச்சாட்டு..!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் மதுபான சாலை அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இன்று எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஒரு மாற்றத்தை விரும்பி மக்கள் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.இருப்பினும் இந்த மாற்றமானது இன்று சிந்திக்க வைத்துள்ளது.அரசாங்கத்தால் சொல்லப்பட்ட விடயங்கள் எதுவும் இன்று கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்றால் இல்லை.

இரண்டு வாரங்களாக பெறப்பட்ட வாகனங்கள் தொடர்பாக பேசப்பட்டாலும் இன்று மறக்கடிக்கப்பட்டுள்ளன.இன்று அந்த வாகனங்களுக்கு என்ன நடந்தது என்று கூட தெரியாமல் உள்ளது.

அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பல பார்கள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் அதற்கும் இன்று எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இன்று முட்டை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.தேங்காய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே எதிர் கட்சியிலிருந்தவர்கள்தான் இன்று ஆளும் தரப்பில் இருந்து எதுவும் பேசாது மௌனிகளாக உள்ளனர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *