
கொழும்பு கொச்சிக்கடை ஜெம்பட்டா வீதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் பாரிய தீப்பரல் ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவருவதற்காக 10 தீயனைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது, குறித்த தீப்பரல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் உள்ள இரசாயண களஞ்சியசாலை ஒன்றிலையே இவ்வாறு தீப்பவரல் ஏற்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.
தீப்பரவல் காரணமாக உயிர் ஆபத்துக்கள் எதுவும் இடம்பெற வில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீப்பரவலுக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படாத நிலையில், ஜெம்பட்டா வீதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.