மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் தாக்கப்பட்டமையைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டமானது எதிர்வரும் சனிக்கிழமை காலை 10 மணியளவில் காந்தி பூங்கா முன்பாக நடைபெறவுள்ளது.
நாட்டில் அண்மைக் காலமாக ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் அச்சுறுத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
போராட்டத்திற்கு ஊடகவியலாளர்கள் சிவில் சமூக அமைப்புக்கள் அரசியல்வாதிகள் மற்றும் நலன்விரும்பிகள் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம் மற்றும் மட்டக்களப்பு ஊடகவியலாளர் தொழிற்சங்கம் ஆகிய இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளனர்.