ரிசாட் வீட்டில் சேவையாற்றிய சிறுமி தொடர்பில் வெளியான தகவல்கள்

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் வீட்டில் சேவையாற்றிக் கொண்டிருந்த நிலையில் உயிரிழந்த சிறுமி தொடர்பில் மேலும் தகவல்கள் வெளியாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதனடிப்படையில் குறித்து சிறுமியின் பிரேத பரிசோதனையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான ரோஹன தெரிவித்துள்ளார்.

டயகம பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்த வீட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

இவ்வாறு அழைத்து வரப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த சிறுமியின் வயது 15 வருடங்களும் 11 மாதங்களும் ஆகும் என அவர் தெரிவித்துள்ளார்.

பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் வீட்டில் சேவையாற்றி வந்த குறித்த சிறுமி கடந்த ஜூலை மாதம் மூன்றாம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சை பெற்று வந்த குறித்த சிறுமி நேற்றையதினம் உயிரிழந்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *