பொது சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் குடும்பநல உத்தியோகத்தர்களின் சேவையினை பாராட்டி கட்டளைத் தளபதியின் ஏற்பாட்டில் ஊக்குவிப்பு பரிசில்கள் வழங்கப்பட்டன
நாட்டினுள் மிகவும் வேகமாக பரவி வருகின்ற கொரோனா தொற்று நோய்ப்பரவலினை நாட்டிலிருந்து ஒழிப்பதற்காகவும் அதனை முழுமையாகவும கட்டுப்படுத்துவதற்காக பாடுபடும் அனைத்துத் துறையினரை விடவும் மருத்துவப் பிரிவினர் மற்றும் சுகாதாரப் பிரிவினரும் முன்னெப்போதும் இல்லாதவாறு மிகப்பெரும் பணிச்சுமை மற்றும் மன அழுததத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் ஊக்கப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணப் பிரதேசத்தினுள் சேவைபுரிகின்ற பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் குடும்பநல உத்தியோகத்தர்களினது சேவையினைப் பாராட்டி ஊக்குவிப்புப் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இன்று யாழ்பாணத்தில் நடைபெற்றது.
குறித்த ஊக்குவிப்புப் பரிசானது தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிறுவுனரும் தலைவருமான வாமதேவன் தியாகேந்திரன் அவர்களுடைய பூரண நிதியனுசரணையின் கீழ் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் 512 வது காலாட் படைப்பிரிவினருடைய ஏற்பாட்டின் கீழும் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் சேவை புரிகின்ற 84 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு ரூபா 5000 உம், 276 குடும்பநல உத்தியோகத்தர்களுக்கு ரூபா 3000 வீதமும் பெறுமதியான ஊக்குவிப்புப் பரிசில்கள் வழங்குகின்ற திட்டத்தின் முதலாவது கட்டமாக சுகாதாரப் பரிசோதகர்கள் 14 பேருக்கும் குடும்பநல உத்தியோகத்தர்கள் 14 பேருக்குமான ஊக்குவிப்பப் பரிசில்கள் வழங்கும் நிகழ்வானது 2021 ஆவணி மாதம் 31 அன்று யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்களின் தலைமையில் 512 வது காலாட் படைப் பிரிவுத தமையகத்தில் இடம் பெற்றது.
காலத்தின் தேவை கருதி அறிவுறுத்தப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக ஒழங்குபடுத்தப்பட்ட குறித்த நிகழ்வில் யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்கள், 51 வது காலாட் படைப் பிரிவினுடைய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்கள், யாழ். பிரதேச செயலகத்தின் பிரதேசசெயலர் எஸ் சுதர்சன் அவர்கள், யாழ். மாவட்டத்தின் தொற்றுநோய்ப் பிரிவிற்கான விசேட வைத்திய நிபுணர் எம் மோகன் குமார், தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிறுவுனர் வாமதேவன் தியாகேந்திரன் அவர்கள் மற்றும் அதன் உறுபினர்கள், பிரதான
சுகாதாரப் பரிசோதகர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள்,சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





